உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அதிவேகமாக சென்ற ஆமி வாகனம் தேசிய லொத்தர் சபை வாகனத்தை பந்தாடியதால் ஆமி இருவர் படுகாயம்

திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா விமானப்படைக்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான லொறி ஒன்றும் இலங்கை தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தின்போது படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.