உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பினை காட்டிய காவலி படைசிப்பாய் மாட்டினர்

முல்லைத்தீவு நகரில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் உள்ள முதன்மை பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவிகளுக்கு தங்கள் அந்தரங்க உறுப்பினை காட்டிய இரண்டு படைச்சிப்பாய்களை பிரதேச இளைஞர்கள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை செல்லம் மற்றும் சென்று வரும் மாணவிகளுக்கு இனம் தெரியாத சிலர் தங்கள் அந்தரங்க ஆண் உறுப்பினை காட்டியுள்ளதாக பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் கிராம மக்களாலும் பொலிசாரிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னிலையில் 18.09.18 நேற்று கரைச்சிக்குடியிருப்பு பிள்ளையார் கோவிலடிப்பகுதியில் சிவில் உடையில் மிதிவண்டியில் சென்ற 59ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இரண்டு படைச்சிப்பாய்கள் வீதியால் சென்ற பாடசாலை மாணவிகளுக்கு தங்கள் ஆண் உறுப்பினை காட்டியுள்ளார்கள் இதனை மாணவிகளின் பெற்றோர்களும் கண்டுள்ளார்கள் இன்னிலையில் பிரதேச இளைஞர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச இளைஞர்கள் இரண்டு படைச்சிப்பாய்களையும் பிடித்துவைத்துக்கொண்டு முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீசார் இரண்டு படைச்சிப்பாய்களையும் அவர்கள் சென்ற மிதிவண்டியினையும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்

இன்னிலையில் பொலீஸ் நிலையத்திற்கு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களாக சி.லோகேஸ்வரன் மற்றும் த.அமலன் ஆகியோர் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் ஏற்கனவே இவ்வறான சம்பவம் தொடர்பில் மக்கள் முறையிட்டும் பொலீசாரும் படைபொலீசாரும் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ளதுடன் குறித்த இரண்டு படைச்சிப்பாய்கள் மிதும் பொலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக முல்லைத்தீவு பொலீசார் தொரிவித்துள்ளார்கள்.