Trending News...

கன்னியாஸ்திரி விவகாரம். பாலியல் புகார் பிஷப் ராஜினாமா

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பணிபுரிந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார்.

பிஷப், தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இதனை மறுத்த பிஷப், இந்த விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும், கன்னியாஸ்திரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதால் தன் மீது அவர் புகார் கூறியதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே, முல்லக்கல் மீதான புகார் தொடர்பாக வாடிகன் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான தேவாலய பிரதிநிதிகள் வாடிகனில் ஆலோசனை நடந்து வருகிறது. சில நாட்களில் விசாரணை நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது.