உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நடிகர் விஜய் இளம் பெண்ணுடன் ஓட்டல் ரூமில் நெருக்கம்! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வெங்காவின் அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படம் மூலம் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்து வெளியான பிளாக் பஸ்டர் வெற்றிப் படமான கீத கோவிந்தம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டா பெண்ணின் கன்னத்தில் முத்தமிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்தப்படங்கள் அர்ஜுன் ரெட்டி படம் வெளியாகும் முன் போட்டோ ஷூட் ஒன்றின் பகுதியாக எடுக்கப்பட்டவை என்றும், இவை விஜய்தேவரகொண்டா பிரபலமாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விஜய்தேவரகொண்டா தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகவிருக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நோட்டா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருடன் மாடல் அழகியும் நடிகையுமான மெஹ்ரீன் கவுர் பிர்சதா நடித்து வருகிறார். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வரவேற்பைப் பெற்றது.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் டியர் காம்ரேட் படத்தில் அவருடன் கீதகோவிந்தம் படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மண்டனா மீண்டும் நடிக்கிறார். இயக்குநர் சந்திரசேகர் எலெட்டியின் உதவி இயக்குநராக இருந்த பாரத் கம்மா இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ரீமந்துடு, ஜனதா கரேஜ் ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிக்பென் சினிமாவின் யாஷ் ராகினேனியுடன் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தமிழில் ஒரு நாள் கூத்து, விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்குத் திரையுலகில் கால் பதிக்கிறார். இது தவிர டாக்சிவாலா என்ற படத்திலும் நடித்துவரும் விஜய் தேவரகொண்டா, ஒய்.எஸ்.ஆர் பயோ பிக் - யாத்ரா என்ற படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கிறார்.