உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தனிமையில் காதலனுடன் மனைவி! ஆசிட் வீசிக் கொன்ற இலங்கை இளைஞர்- பொலிசில் சிக்கியது எப்படி?

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் காதல் மனைவியையும் அவரது காமுகனையும் ஆசிட் வீசி கொலை செய்த இலங்கை இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஷார்ஜாவில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற நிலையிலேயே ஷார்ஜா பொலிசாரால் விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் கைதானார்.

தற்போது இந்த வழக்கை ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது 23 வயதான மனைவியையும் இவரது காதலனையும் குடியிருப்பு ஒன்றில் தனிமையில் இருக்கும்போது ஆசிட் வீசி தாக்கியுள்ளார்.

இதில் குறித்த இளம்பெண் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த அவரது காதலன் சில மாதங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார்.

பல ஆண்டுகள் காதலுக்கு பின்னரே இரு வீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் தமது காதல் மனைவியிடம் இருந்து இதுபோன்ற செயலை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் சில மாதங்களில் அவரது நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் ரீதியாக மாதத்தில் 20 நாட்கள் வரை ஷார்ஜாவில் இருந்து இலங்கை சென்று வருவதை குறித்த நபர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பேஸ்புக் பக்கத்தில் தமது மனைவி வேறொரு இளைஞருடன் காண நேரிட்ட அவர், தமது மனைவிக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் உடனடியாக ஷார்ஜா திரும்பியுள்ளார்.

பின்னர் தமது மனைவி மற்றும் அவரது காதலனின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொருட்டு ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்த தாம் ஒரு குடியிருப்பு ஒன்றில் சென்றதாகவும், அங்கே படுக்கை அறையில் இருந்த இருவர் மீதும் கையோடு எடுத்துச் சென்ற ஆசிட்டை வீசியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.