Trending News...

’பேட்ட’ திரைபடத்தில் ரஜினியின் கெட்-அப்: புகைப்படங்கள் கசிந்தன..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ரஜினியின் கெட்-அப் என்ன என்பது தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ’காலா’ படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 2.0 படம் நவம்பரில் வெளிவருகிறது. இந்நிலையில் தற்போது இளம் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தின் நடித்து வருகிறார்.

தமிழ் பிரபா என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் தாயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் உ,பி-யில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக சென்னை குன்றத்தூர் அருகே உள்ள ஏ.ஆர். ரஹ்மானின், ஏ.ஆர் கலையரங்கத்தின் ’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற்றுள்ளன. இதனை பி.ஆர்.ஒ நிகில் முருகன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.