உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வாள்வெட்டுக் கும்பல் வீடு புகுந்து அட்டூழியம் – கொக்குவிலில் சம்பவம்

கொக்குவில் நந்தாவில் லேனில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்தித் தப்பித்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

“2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் முகங்களை மூடி துணியால் கட்டியிருந்தனர். எம்மை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டு ஆறு பேரும் தப்பித்தனர்” என்று வீட்டிலிருந்தவர்களால் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

“ஆவா எதிர்ப்புக் குழுவின் உறவினர் வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆவா குழுவைச் சேர்ந்தவர்களே தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.