உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

முதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் 67 வயதான பிலிஃப். சிறுவயது முதலே ஊர்வன இன பிராணிகளோடு பிரியம் கொண்டவர்.

அதனால் தனது வீட்டையே பிராணிகளின் புகலிடமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் சுமார் 400 ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்புகள், முதலைகள், சிலந்தி என பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன.

தற்போது 40 ஊர்வன பிராணிகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான உணவு, அவற்றை பராமரிப்பது என இதையே தன் வாழ்வாக்கி கொண்டுள்ளார் பிலிஃப்.