யாழில் பெண்களின் கைப்பைகளை வழிப்பறி செய்த திருடர்கள்
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால், அரச பெண் பணியாளர்கள் இருவருடைய கைப்பைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது
வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்வயலைச்சேர்ந்த ஆசிரியை ஒருவரும் மருத்துவமனைப் பணியாளர் ஒருவருமே தமது கைப்பைகளைப் பறிகொடுத்துள்ளார்கள்.
சாவகச்சேரி மகளிர் கல்லூரிச்சாலை, கற்குழிச் சாலை ஆகிய இரு இடங்களிலும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
கைப்பைகளை அபகரித்துச் சென்றவர்கள் பையினுள் காணப்பட்ட அலைபேசி, பணம், வங்கியட்டைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பைகளை வீசி விட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு சம்பவங்களும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மறைகாணியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைகாணியின் உதவியுடன் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் சாவகச்சேரிப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.