Trending News...

முள்ளம்பன்றியை வேட்டையாட கற்குகைள் நுழைந்தவர்களுக்கு நேர்ந்த கதி – படங்கள்

ராகலை – சென்ட் லெனாட் பிரதேசத்தில் உள்ள வன பகுதியில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ராகலை மற்றும் மெதவத்தை பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 31 வயதான நபர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் விலங்கு வேட்டைக்காக வீடுகளில் இருந்து சென்றுள்ள நிலையில், அவர்களுடன் சென்ற நாயும் கற்குகை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள நபர்கள் முள்ளம்பன்றிகளை வேட்டையாடுவதற்காக கற்குகைகுள் நுழைந்துள்ள போதே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.