ஆரம்ப காலத்தில் எழும்பும் தோலுமாக இருந்த ஸ்ருதிஹாசன் – ரசிகர்கள் ஷாக் – புகைப்படம் உள்ளே

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பெஹென் ஹோஹி டெரி’. இந்திப் படமான இதில், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் கமிட்டானார்.

வரலாற்றுப் படமான இதில் நடிக்க, தனிப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால், திடீரென படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அதன்பிறகு, எந்தப் படத்திலுமே ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகவில்லை. கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே அவர் கைவசம் இருந்தது. கமல் அரசியலில் பிஸியாகிவிட்டதால், அந்தப் படமும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.

இந்நிலையில், பாலிவுட் படமொன்றில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் இந்தப் படத்தில், வித்யுத் ஜம்வால் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இப்படி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் ஸ்ருதிஹாசன். ஆரம்ப காலத்தில் மிகவும் ஒல்லியாக இருக்கும் போது பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது, எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகின்றன.