உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வெறியில் வீடுபுகுந்து பெண்ணின் சங்கிலி அறுக்க முயன்றவர்களிற்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை-முனைக்காடு கிராமத்தில் வீடொன்றிற்குள் புகுந்து பெண்ணொருவரின் தங்க சிங்கிலியை அறுத்து செல்ல முயன்ற திருடர்கள் ஒருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.

நேற்று (19) இரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் முனைக்காட்டிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்தனர். வீட்டிலிருந்து பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் வீட்டிலிருந்தவர்கள் சுதாகரித்து, சத்தமெழுப்பியதும் திருடர்கள் நிலைகுலைந்துள்ளனர். அயலவர்களும் ஒன்று சேர, ஒரு திருடன் மடக்கிப்பிடிக்கப்பட்டான். மற்றையவன் தப்பியோடி விட்டான்.

அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டது.

திருடனும், மோட்டார்சைக்கிளும் பட்டிப்பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடன், வடிசாராயம் அருந்தியிருந்தான். படுவான்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மது உற்பத்தி அதிகளவாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.