Trending News...

ஆபாச காட்சிகளை காட்டி நடிக்க வற்புறுத்தல்!! பகிடி வதையால் உயிரை மாய்தார் மாணவி

ஆபாச திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்று நடித்துக் காண்பிக்குமாறு பகிடிவதைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.இந்தச் சம்பவம் சப்ரகமுவ பல்கலைகழகத்தில் இடம்பெற்றதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமலி சத்துரிகா என்ற பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தவறான முடிவெடுக்க முன்னர் அந்த மாணவிதனக்கு நேர்ந்த பயங்கர அனுபவங்கள் குறித்த கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தன்னைப் பகிடிவதை செய்வதாகத் தெரிவித்து கொடூரமாக நடத்திய இரு மாணவிகள் என்று குறிப்பிட்டு அவர்களின் பெயரையும் குறிப்பிட் டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரு மாணவிகளும் அடையாளம் காணப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளதாவது:
கணினியில் ஆபாச திரைப்படங்களைக் காண்பித்து, சப்ரகமுவ பல்கலைக்கழக உணவு விடுதிக்கு அருகில் மாணவியருக்கு முன்பாக அதேபோல நடித்து காண்பிக்குமாறு மேற்படி இரண்டு மூத்த மாணவிகளும் நிர்ப்பந்தித்துள்ளனர்.

இதனாலேயே இவ்வாறான முடிவை எடுத்துள்ளேன் அத்துடன் இறுதிக்கிரியையில் சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவர்கள் யாரையும் அனுமதிக்கவேண்டாம்.தனது உடலை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யவும். தனது பாடப்புத்தகங்களையும் தன்னுடன் சேர்த்து அடக்கம் செய்யும்படியும், கணினி, கையடக்கஅலைபேசி, ரப் என்பவற்றை நண்பி (தரிந்து) என்ற மாணவியிடம் வழங்கும்படியும் கோரியுள்ளார்.

தவறாக முடிவெடுத்த மாணவியும், பகிடிவதை செய்த மாஷா என்ற மாணவியும் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். பாடசாலைக் காலத்திலும் இருவருக்கிடையில் விரிசல் காணப்பட்ட தாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.