பூமி அழிந்தபின் என்ன நடக்கும்? மீண்டும் மனித இனம் தோன்றுமா?

கலியுகம் முடியும்போது என்ன ஆகும்? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்கான பதில் என்ன என்று இங்கே விவாதிப்போம்.

மஹாபாரத குருக்ஷேத்திர யுத்தத்தின் போதே எப்படி துவாபரயுகம் முடிந்துவிட்டது என்பதும், அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும்போது ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு கால ஓட்டத்தை நிறுத்தினார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. கீதோபதேசம் முடிந்ததும் கலியுகம் ஆரம்பம் ஆனது, கிருஷ்ணர் பூதவுடலை விட்டு வைகுண்டம் புறப்பட்டதும் கலியுகம் பரவ ஆரம்பித்தது.

இயற்கை சீற்றங்கள்
வேத சாஸ்திரங்களின்படி கலி அதன் உச்சத்தை அடைந்ததும், இன்னொரு கொந்தளிப்பு உருவாகும். போர்கள் என்றில்லை, மக்கள் தொகை அதிவேகப் பெருக்கம், இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்படும். அதன் பிறகு, உயர்ந்த சைதன்ய நிலையில் நல்ல முன்னேற்றத்துடன் கூடிய புதியதொரு சகாப்தத்தில் இந்த உலகம் பரிணமிக்கும்.

மந்திரங்கள்
சில பழங்கால பதிவுகளின் படி, "கலியுகத்தில் சூரியனிடமிருந்து வெகு தொலைவில், சூட்சுமம் என்பது கீழ்நோக்கி இருக்கும். மனிதர்களுக்கு யோகா, த்யானம், மந்த்ர யந்திரங்களை போதிப்பதில் ஒரு பயனும் இல்லை - அவர்களுக்கு அது புலப்படாது" என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

பக்தி வழி
அவரை பொறுத்தவரை கலியுக வாழ்க்கையில் அமைதியாக கரை சேர வழி, பக்தி. பக்தியுடன் எவர் ஒருவர் தம்மை முழுமையாக இறைவனிடத்தில் சரணாகதி செய்கிறாரோ, அவர் தமக்கான சூட்சுமத்தை உருவாகிக் கொள்கிறார், மற்றும் நிம்மதியாக கரை சேர்கிறார்.

ராமாயணம்
இராமாயணம் நற்பண்புகள், குடும்பத்தில் அன்பு, நல்ல உறவுமுறைகள், புண்ணியம், விசுவாசம், கடின உழைப்பு, நேர்மை போன்றவற்றை வரவிருக்கும் இன்னும் ஆயிரம் தலைமுறைகளுக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

மகாபாரதம்
மகாபாரதம் பொறாமை, கொடூரம், துரோகம், கெட்ட கர்மா, அவமதிப்பு, கொடூரமான இதயங்களும் ஆன்மாவும் பேரழிவுகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்பதை உலகிற்கு பறைசாற்றுகிறது.

கலியுகம் முடிந்த பின்
இப்போது கலியுகம் முடிவடைந்தவுடன் என்ன என்ன நடக்கும்? என்பதுதான் கேள்வி. முழு உலகமும் இருள் படுகுழியில் மூழ்கிவிட்டால், முழுமையான காலமற்ற காலப்பகுதி இருக்கும், கால சுழற்சி நின்று, ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிடும். அதன் பிறகு தான், மறுபடியும் இருட்டின் முடிவில் வெளிச்சம் இருக்கும், மீண்டும் சத்யயுகத்திற்கு வழி வகுக்கும்.