காதல் ஜோடி ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட காதல் ஜோடி மரத்தில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசாவின் Pipili நகரத்தில் உள்ள Routapada கிராமத்தைச் சேர்ந்தவர் Laba Prusty(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவரும் ஆசிரியராக இருப்பவருமான Soudamini Beher(24) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் தங்கள் இருவரின் குடும்பத்தினரின் அனுமதியுடன் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின் இறுதியில் திருமணத்திற்கு சரி என்று அனுமதித்துள்ளனர்

இந்நிலையில் கடந்த புதன் கிழமை மாலையில் இந்த காதல் ஜோடி காணமல் போயுள்ளனர். வெகு நேரமாகியும் வீடு திரும்பால் இருந்துள்ளனர். அப்போது அங்கிருக்கும் வயல் நிலத்தின் மரத்தில் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பெண்ணின் கழுத்துப் மற்றும் சில பகுதியில் காயம் இருப்பதால், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அதன் பின் கடைசி நேரத்தில் சம்மதம் தெரிவிக்க காரணம் என்ன என்பது குறித்து இருவரின் பெற்றோரிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.