உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தாய், குழந்தைகள் தீக்குளித்ததில் திடீர் திருப்பம், கணவனே தீ வைத்து கொன்று நாடகமாடியது அம்பலம்

குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீ வைத்து கொளுத்தி விட்டு, கணவனே தற்கொலை நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலம் அருகே ஆத்தூர் அழகாபுரத்தை சேர்ந்த பூமதி கடந்த புதன்கிழமை, தமது குழந்தைகள் நிலா, பூவரசன் ஆகியோருக்கு தீ வைத்துவிட்டு தாமும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. தீவிர தீக்காயமடைந்த 3 பேரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் பூமதியும், நிலாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி விசாரித்த காவல்துறையினர், கணவர் கார்த்திக் என்பவர் மனைவி குழந்தைகளை கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியில் வந்தது.

சம்பவம் நடந்த அன்றைய தினம், குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திக், மனைவி பூமதியிடம் பிரச்சனை செய்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்றதுடன் எதுவும் தெரியாதது போல் தற்கொலை நாடகம் ஆடியதாக கூறப்படுகிறது.

கார்த்தியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.