உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் படம்.. ஆஸ்திரேலியாவில் வெளியீடு..

இனப்படுகொலையை மையமாக வைத்து புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய வாழ்த்தமிழர் ஒருவர் சாட்சிகள் சொர்க்கத்தில் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

உலகில் உள்ள மக்களை உலுக்கிய சம்பவம் இனப்படுகொலை, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் பாடகர், தொகுப்பாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்டிருக்கும் திரைப்படம் 'சாட்சிகள் சொர்க்கத்தில்'.

இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார், இலங்கையில் தடைசெய்யப்பட்ட இத்திரைப்படம் தற்போது ஆஸ்திரேலியாவில் 'ஈவென்ட் சினிமா' எனும் திரையரங்கில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம்.

இந்திய திரைப்படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்குகளோ இதுபோன்ற வெளிநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை திரையிட முன்வருவதில்லை.

இப்படி இருக்க ஆஸ்திரேலியாவில் உள்ள 'ஈவென்ட் சினிமா' திரையரங்கம் திரையிட முன்வந்தது புலம்பெயர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே பார்க்கப்படுகிறது.