கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து

மேற்கு வங்க மாநிலம் , கொல்கத்தாவில் உள்ள பழைய மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கொல்கத்தா புறநகர் பகுதியில் தராடலா அருகே மேமின்பூர்- தராடலா இடையே ஒரு மேம்பாலம் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் இன்று சரிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் கார், மினி பஸ், இரு சக்கர வாகனங்கள் ஆகியன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிர் பலி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மேம்பாலத்தை சரியாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.