உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்தியாவையே அதிரவைத்த கூட்டு துஸ்பிரயோகம்: பெருமையாக பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றவாளி

இந்தியாவையே அதிரவைத்த அரியானா மாணவி கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியும், ராணுவ வீரரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில், பெண்களை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்து பெருமையாக பதிவிட்டுள்ளனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்மந்தப்பட்ட சிறுமி, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியரசுத்தலைவர் பதக்கம் பெற்றவர் என்பது தெரியவந்தது.

அதேசமயம் சம்பவத்தில் பங்கஜ் என்ற ராணுவ வீரர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான நிஷு போகட் தன்னுடைய பேஸ்புக்கில் பெண்கள் குறித்து மிகவும் தவறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘எனக்கு அதிகமான பெண் தோழிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது நான் மற்ற பெண்களை துஸ்பிரயோகம் செய்திருக்கிறேன் என்று’ என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து குற்றவாளிகள் பலரும் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

நிஷு போகட் உட்பட குற்றவாளிகள் பலரும் இதில் ராணுவ வீரராக முயற்சி செய்து வருவதால், அவர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.