உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பிரபாகரன் படத்தை நெஞ்சில் சுமந்து விளையாடும்போதே உயிரை விட்ட வீரர்..!

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெங்குளம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் 2 நாட்களாக கபாடி போட்டி நடந்து வந்தது.

கடந்த 21 ஆம் தேதி மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெங்குளம், இராமநாதபுரம் அணிகள் மோதின.

வெங்குளம் அணியில் விளையாடிய கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா,. திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை சக வீரர்கள் துரிதமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது.

மனமுடைந்த சக வீர்கள் மற்றும் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நட்பின் பினைப்பில் இனைந்து கபடி ஆடுகளத்திலேயே உயிர் நீத்த அந்த திறமைமிக்க விளையாட்டு வீரனுக்கு நன்றி ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.