Trending News...

கடலில் நீராடிய வெளி நாட்டவர்களிற்கு நேர்ந்த விபரீதம்

திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த 6 வெளிநாட்டவர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், உயிர் பாதுகாப்பு பிரிவின் 3 பொலிஸ் அதிகாரிகளால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட ஆறு பேரில் இந்தியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தையொன்று உள்ளிட்ட 4 பெண்களும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆணொருவரும் , காணப்படுவதுடன், தெரிவிக்கப்படுகின்றது.

அலையில் அள்ளுண்டுச் சென்ற இவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கூச்சலிட்டதையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரிகள் நீந்திச் சென்று காப்பாற்றி, படகு ஒன்றின் மூலம் இவர்களை கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

நிலா​வெளி கடற்கரை ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள வந்தவர்களே இவ்வாறு அ​லையில் அடித்துச் செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.