உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

துப்பாக்கி தோட்டாவை தடுத்து காவலரின் உயிரை காப்பாற்றிய IPHONE

தாய்லாந்தில் காவலர் பயன் படுத்திய ஐபோன், அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

பட்டயாவில் உள்ள உணவகத்தில் 31 வயதான காவலருடன் குடித்துவிட்டு தகராறு செய்த கும்பல், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் காவலரின் வலது பக்கத்தில் குண்டு பாய்ந்துள்ளது.

எனினும் வலது பாக்கெட்டில் அவர் வைத்திருந்த ஐபோன் மீது குண்டு பாய்ந்ததால் , அவர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். காவலரின் பயன்படுத்திய ஐபோன்  Bullet Proof ஆக அவரது உயிரை காப்பாற்றிய நிகழ்வு இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.