Trending News...

1 கோடி பணமும் 5 கோடி ருபா தங்க நகைகளும் கொள்ளை.

கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபா் 26ஆம் திகதி மெத்தேக்கோட மக்கள் வங்கியில் பி.பகல் 03.00 மணியளவில் 3 கொள்ளையா்கள் உட்புகுந்து 93 இலட்சத்தி 51ஆயிரம் ருபா பணமும், 5 கோடி ருபா பெருமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தனா்.

இதனை இன்று (30) அதிகாலை கல்கிசைப் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரொசன் விஜயசிங்க தலைமையிலான பொலிஸ் குழு கொள்ளையா்களையும் கைது செய்து அவா்கள் களவாடிய பணம் நகைகளையும் மீள மீட்டு்ளளனா். என இன்று(30) கல்கிசை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளாளா் ருவான் குணசேகர தெரிவித்தாா்.

பிரதான சந்தேக நபா் டிலான் சதுரன் (வயது 34) பாதுக்கவை சோ்ந்தவா் இவா் ஒரு டயா் விற்கும் கடையை நடாத்தி வந்துள்ளாா்.

வியாபாரத்தில் பாரிய கடன் தொல்லைக்குட்பட்டிருந்தாா். இரண்டாவது சந்தேக நபா் சம்பந் இந்திக்க குமாா் (41) பாதுக்க முன்றாவது நபா் செல்வராஜா பானமை .பொததுவில் தற்காலிகமாக கைலெவல் வீதி கொடகமவில் வசித்து வந்துள்ளாா்.

இவ் கொள்ளைச் சம்பவங்களை ஈடுபட்டவா்களை கைது செய்வதற்காக உதவிப் பொலிஸ் அதிகாரி மொரட்டுவை பிரிவு சமிந்த தர்மரத்தின மற்றும் பண்டார, சம்பந்த, மதுசங்க நந்தன ,சந்துருவன், துசார ஆகிய பொலிஸாரும் இணைந்தே இப் பாரிய கொள்ளைச் சம்பவத்தினை 3 நாட்களுக்குள் கண்டுபிடித்துள்ளனா்.

பிரதான சந்தேகநபா் விளையாட்டுத் துப்பாக்கியும் மேலும் கூறிய ஆயுதங்களுடேனே சென்று நகைகளையும் பணங்களையும் கொள்ளையடித்துவிட்டு அங்கு இருந்த சீ.சீ.டி கமராவின் பதிவு சிப்பையும் கழற்றிச் சென்றுள்ளாா்.

அதனை ஒரு ஆற்றில் வீசியதாகவும் கூறியுள்ளாா். இவா் இக் கொள்ளைசம்பந்தமாக தொலைபேசி உரையாடல் செய்யப்பட்ட சிம் காட்டினை அவரது டயா் வியாபாரத்தில் கடனுக்கு வழங்கியவரது அடையாள அட்டையினையும் பிரதியை எடுத்துள்ளாா். அந்த பிரதியை வைத்தே அவா் சிம் காட்டினைப் பெற்றுள்ளாா். விசாரனையின் போது தெரியவந்தது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட நகைகளின் 6 கிலோ, மற்றய பணத்தில் 85இலட்சம் ருபாவை அவரது வீட்டில் பொலித்தீன் பையில் போட்டு ஒரு மடுவில் பறப்பி இருந்தனைப் பொலிஸாா் கண்டு பிடித்துள்ளனா். தங்கம் 6 கிலோ 400இலட்சம் ருபா பெறுமதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மிகுதியான பணம் விசாரனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆகவே தான் பொது மக்கள் அடையாள அட்டையாரும் வாங்கும்போது அதனை பிரதியை வழங்கும் போது மேலதிக பிரதியை வழங்கும் தாம் அவதானமாக இருத்தல் வேண்டும். அத்துடன் அரச வங்கியில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தா்களுக்கு துவக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் அவ்வாறான சந்தேக நபா்களைக் கொள்ளையடிக்கும் போது அதனை பாவிக்கும்படியும் நான் கூறிக்கொள்ள் விரும்புகின்றேன்.

அத்துடன் இவ் விசாரனையையின்போது பொலிசாா் விசானையை முடித்து மஜிஸ்த்ரேட் நிதிமன்றத்துக்கு இவா்களை பாரப்படுத்தாமல் உயா் நிதிமன்றத்தில் ஆஜா் செய்து உயரிய தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு நிதிமன்றங்களை கேட்டுக்கொள்வதாக பொலிஸ் பேச்சாளா ருவான் தெரவித்தாா்.