உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா? உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்

நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத "கோல்டிலாக்ஸ் மண்டலத்தை" தேடி கண்டறிவதன் மூலம் விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

வேற்றுக்கிரங்களில் வாழுகின்ற நம்மை போன்ற உயிரினங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு வேற்றுக்கிரவாசிகளை கணக்கெடுப்பது முதல் சூரிய சக்தியால் இயங்குகின்ற விண்கலம் வரை நாம் அறிந்திருக்க வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் யாரவது வாழ்கிறார்களா?

பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

இதற்கு சிறந்த விடையை சொல்ல விஞ்ஞானிகள் துணிந்திருக்கின்றனர் அல்லது ஏதாவது விடையை கூற முனைந்துள்ளனர்.

இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல் உள்ளது. இது தொடர்பாக முக்கிய வானியல் திருப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் சில எதிர்பார்க்காத கோட்பாடுகள் மற்றும் முழுவதும் விசித்திரங்கள் நிறைந்த உண்மைகள் காணப்படுகின்றன.

வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதாக இருந்தால், அவர்கள் கோல்டிலாக்ஸ் மண்டலத்தில்தான் வாழ முடியும் என்று தெரிகிறது. வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் வாழ்வது பற்றி விஞ்ஞானிகள் எவ்வாறு கண்டுபிடிக்க முயல்கின்றனர்?

1. நிலவில் கறுப்பான இடங்கள்
17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வானில் வெகு தொலைவில் இருப்பவற்றை உற்று பார்ப்பதற்கு கலிலியோ கண்டுபிடித்த புதிய தொலைநோக்கி உதவியதை தொடர்ந்து வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் பற்றி அறியும் ஆவல் நம்மிடம் அதிகரித்தது.

நிலவில் கறுப்பாக தெரிந்த இடங்கள் நீர் நிறைந்த பெருங்கடல்கள் என்று நம்பப்பட்டு, லத்தீன் மொழியில் 'கடல்கள்' என்று பொருள்படும் "மரியா" என்று அழைக்கப்பட்டன.

நம்முடைய கடல்களில உயிரினங்கள் வாழ்வதுபோல அங்கும் இருக்கலாமா?

நிலவிலுள்ள இந்த கறுப்பு இடங்கள் முற்காலத்தில் எரிமலை சீற்றங்களால் உருவான கருங்கல் சமவெளிகள் என்று இப்போது நாம் அறிய வந்துள்ளோம்.

2. சக்தி வாய்ந்த செவ்வாய் கிரகவாசிகள்
செவ்வாய் கிரகவாசிகள் எவ்வாறு தோற்றமளிப்பார்கள்?
சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் வாழ்வோர் சராசரியாக மனிதர்களைவிட உயரமானவர்களாக இருப்பர் என்று 1870ம் ஆண்டு வானியலாளர் வில்லியம் ஹெர்ச்செல் தெரிவித்தார்.

அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை பயன்படுத்தி செய்வாய் கிரகத்தை அளவிட்ட அவர், அதன் பருவகால அளவையும், நாட்களையும் கவனமாக அளவிட்டுள்ளார்.

நமது பூமியை விட செவ்வாய் கிரகம் சிறியதாக இருப்பதால், அதிலுள்ள ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். செவ்வாய் கிரகவாசிகள் அதிக உயரம் கொண்டிருப்பர் என இதனால் பொருள்படுகிறது.

3. மேல்நிலையான சனிக்கிரகவாசிகள்
புத்திசாலிகள் அல்லாத புதன்கிரகவாசிகளில் இருந்து புத்திக்கூர்மையுடைய சனிக்கிரகவாசிகள் வரை புவிக்கு அப்பாலுள்ளவை பற்றிய அறிவு சூரியனிடம் இருந்து காணப்படும் தொலைவை போல எட்டாத ஒன்றாகவே இருந்தது என்று தத்துவயியலாளர் இம்மானுவேல் கான்ட் கூறியுள்ளார்.

4. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கணக்கெடுப்பு
1848ம் ஆண்டு ஸ்காட்லாந்து திருச்சபை அமைச்சரும், அறிவியல் ஆசிரியருமான தபமஸ் டிக், சூரிய கும்பத்திற்குள் வாழுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் எண்ணிக்கையை கணக்கிட தொடங்கினார்.

புவிக்கு அப்பால் வாழுகின்ற உயிரினங்களின் செறிவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 280 பேர் வாழுகின்ற இங்கிலாந்துக்கு ஒத்தாக இருந்தால், சூரிய குடும்பத்திற்குள் 22 டிரில்லியன் வேற்றுக்கிரகவாசிகள் வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.


5. சந்திரனில் உயிர் வாழ்க்கை
உயிர் வாழ்வதை ஆய்வு செய்ய சிறந்த இடம் புதன் கிரகம் போன்ற அருகிலுள்ள சூரிய குடும்பமல்ல. வியாழன் கிரகத்தை சுற்றிவருகின்ற யுரோப்பா மற்றும் சனிக்கிரகத்தின ஒரு செயற்கைக்கோளான என்சிலாடுஸ் போன்ற தொலைதூர சந்திரன்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் அடர்த்தியானதொரு பனிக்கட்டி அடுக்குக்கு அடியில் நீர்நிலை பெருங்கடலை கொண்டுள்ளன.

இந்த சந்திரன்களின் பெருங்கடல்கள் பனியாக உறைந்து விடுவதை தடுப்பதற்கு உள்ளக வெப்ப ஆதாரம் ஒன்று இருக்குமென நம்பப்படுகிறது.

இந்த சந்திரன்களின் மையப்பகுதியில் வெப்பம் உருவாகி, பெருங்கடல் தரையிலுள்ள வெப்பநீர் துளைகள் வழியாக வெளியாகலாம்.

பூமியில் வெப்பநீர் துளைகள் ரசாயன எதிர்வினையை உருவாக்கி, விறுவிறுப்பாக உள்ள நீர்நிலையிலுள்ள சூழலியல் அமைப்புகளுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்கிறது.


6. விண்வெளி மீன் வகை உயிரினங்கள்

இத்தகைய நீர்நிலையுடைய சந்திரன்களில் உயிரினங்கள் வாழ்வதாக இருந்தால், அவை எவ்வாறு தோன்றும் என்பதற்கு எளிமையான இயற்பியல் துப்புகளை வழங்கும்.

பெரிய நீர்வாழ் வேற்றுக்கிரக உயிரினங்கள் வாழ்ந்தால், இரையை பிடிப்பதற்கு அல்லது இரையாகுவதில் இருந்து தப்பிக்க அவை வேகமாக செல்ல வேண்டியிருக்கும்.

எனவே, மீன் வகைகள், டால்பின்கள் மற்றும் சுறாக்கள் போன்ற வடிவங்களில் அந்த உயிரினங்கள் இருக்கலாம்.

மீன் வகை உயிரினங்களை தேடுகின்ற படலம் இங்குதான் தொடங்குகிறது.


7. தொலைதூர உலகங்கள்
பால் வீதியில் பூமியை போன்ற 4000 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சூரிய குடும்பத்திற்கு வெளியில், நமக்கு அருகிலுள்ள நட்சத்திர மண்டலத்தில் 3,800 கிரகங்களை கண்டறிந்த பின்னர், இந்த மதிப்பீட்டுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இதனை விண்மீன் மண்டலம் (கேலக்ஸி) முழுவதும் கணக்கிட்டால் பல்லாயிரம் கோடிக்கணக்கான கிரகங்களை நாம் பார்க்கலாம்.


8. உயிரினங்கள் வாழும் அறிகுறிகள்
உயிரினங்கள் வாழ்வதை பற்றி அறிய எப்படி தேடுகிறார்கள்?

சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகங்களை பற்றி ஆய்வு செய்கையில், உயிர்கள் வாழுகின்ற அடையாளங்களான தனித்துவ குறியீடுகள் என்று வானியலாளர்கள் குறிப்பிடும் வாயுக்களை ஆய்வு செய்கின்றனர்.

கரையான்கள் முதல் பசுக்கள் வரை பூமியில் வாழும் உயிரினங்களால் மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. எரிமலைகளாலும் மீத்தேன் வெளியிடப்படுகிறது.

எனவே, சூரிய ஒளியால் நமது வளிமண்டலத்தில் இயற்கையாக உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் மற்றும் ஓசோன் போன்ற பிற வாயுக்களோடு கலந்துள்ள மீத்தேனை கண்டறிய பாடுபடுகிறோம்.

9. கோல்டிலாக்ஸ் மண்டலம்

நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கின்றார்களா?

நாம் எங்கு தேடுகிறோம்? சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகங்களில் கோல்டிலாக்ஸ் மண்டலம் என்று அழைக்கப்படும் அல்லது வசிக்கும் சாத்தியம் இருக்கும் பிரதேசங்கள் கவனத்தை செலுத்தி தேடுவதற்கு சிறந்த இடம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த இடம் முக்கிய நட்சத்திரத்தில் இருந்து மிகவும் நெருங்கியும் (அதிக வெப்பமாகவும்) இல்லை. வெகுதொலைவிலும் (அதிக குளிராகவும்) இல்லை. இதனால், உயிர்கள் வாழ்வதற்கு சிறந்த சூழல் வழங்கப்படுகிறது.

நாம் கண்டறிந்துள்ள மிகவும் அருகிலுள்ள சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகம் 'பிராக்ஸிமா சென்தௌரி பி' என்பதாகும். சூரியனுக்கு அருகில் சுற்றியிருக்கும் உயிரினங்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இது காணப்படுகிறது.

10. சூரிய சக்தியால் இயங்கும் விண்கலம்

இந்த நட்சத்திய குடும்பத்தை சென்றடைவதற்கான தனியார் லட்சிய பணித்திட்டமான 'பிரேக்த்ரு ஸ்டார்ஷாட்' 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ரஷ்யாவின் "முதலாளித்துவ மற்றும் இயற்பியலாளர்" யூரி மில்னரால் நிதியுதவி அளிக்கப்படும் இந்த பணித்திட்டம், சூரிய புயலின் ஊடாக ஒளியின் 20 சதவீத வேகத்தில் பயணிக்கும் சூரிய சக்தியால் இயற்குகின்ற விண்கலனை வடிவமைப்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது.

இந்த முயற்சி வெற்றிபெற்றால், இத்தகைய சிறிய விண்கலன்கள் 'பிராக்ஸிமா சென்தௌரி பி' கிரகத்தை சென்றடைய 20 ஆண்டுகள் ஆகலாம். அங்கிருந்து தரவுகளை பூமிக்கு அனுப்புவதற்கு 4 ஆண்டுகள் மேலும் ஆகலாம்.

11. புத்திக்கூர்மையான வேற்றுக்கிரகவாசிகள்


பால் வீதியின் மையத்திலுள்ள கருந்துளைகள் அல்லது மிக பெரிய நட்சத்திரங்கள் அல்லது மீக பெரிய கருந்துளைகளில் சில வேற்றுக்கிரகவாசிகள் வாழலாம் என வானியலாளர்கள் கருதுகின்றனர்.

நம்மை விட ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஏதாவது பண்பாடுகள் செயற்கை மதிநுட்ப கருவிகளை உருவாக்கியிருக்கலாம்.

அவைகள் மென்மையும், ஈரமும் கொண்டவைகளாக இல்லாமல் அல்லது நீரும், ஆக்ஸிஜனும் இருக்கின்ற இடத்தில் உயிர் வாழுகின்ற மண்டலத்தில் வாழாமல் இருக்கலாம்.

கருந்துளைகள் அல்லது மீக பெரிய நட்சத்திரங்களை போல, எல்லா வேற்றுக்கிரகவாசிகளும் அதிக சக்தியுடைய வெப்பமான இடங்களில் அடிக்கடி உலவுவதை விரும்பலாம் என்று சில வானியலாளர்கள் கருதுகின்றனர்.