உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களை சரமாரியாக தாக்கிய 15 வாலிபர்கள்.

உந்­து­ரு­ளி­யில் வந்த 15க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வீடொன்­றுக்­குள் புகுந்து அங்கி­ருந்த பெண்­க­ளைக் கடு­மை­யா­கத் தாக்­கி­யுள்­ள­னர்.

அந்­தச் சத்­தம் கேட்­டுக் காப்­பாற்­றச் சென்ற அயல் வீட்­டுக்­கா­ர­ரை­யும் கொட்டன்­கள், வாள் கொண்டு தாக்­கி­யுள்­ள­னர். இந்­தச் சம்­பத்­தில் 7 பேர்காய­ம­டைந்­த­னர் என்று கூறப்­ப­டு­கின்­ற­போ­தும் இரு­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை சாவ­கச்­சேரி, கச்­சாய் வீதி­யில் உத­ய­சூ­ரி­யன் கிரா­மத்­தில் நடந்­துள்­ளது.7க்கு மேற்­பட்ட உந்­து­ரு­ளி­க­ளில் வந்த 15க்கும் மேற்பட்­ட­வர்­கள் இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. வீட்­டுக்­குள் நுழைந்து பெண்­க­ளைத் தாக்கி வீதிக்கு இழுத்து வந்­துள்­ள­னர்.

அந்­தச் சத்­தம் கேட்­டுத் திரண்ட அய­ல­வர்­கள் மீது கற்­க­ளைக் கொண்டு தாக்கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். அவர்­களை நெருங்­கிச் சென்ற இரு­வர் மீது கொட்­டன்­கள், வாளால் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். அதில் இரு­வ­ருக்­குத் தலை­யில் காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதன்­பின்­னர் தாக்­கு­த­லா­ளி­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

நேற்­று­முன்­தி­னம் இரு இளை­ஞர்­க­ளுக்கு இடையே மோதல் நடந்தது என்­றும், அதில் ஒரு­வர் சிறு காய­ம­டைந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யா­கவே நேற்­றைய தாக்­கு­தல் நடந்­துள்­ளது என்று அந்­தப் பகு­தி யைச் சேர்ந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.