உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

17 வயதிற்குட்பட்ட 21 மாணவியர் பொது இடத்தில் சில்மிசம்!! பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!!

குருணாகலில் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்த கொண்ட மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் பகுதியிலுள்ள ஏரி பகுதியில் மோசமான முறையில் நடந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 முதல் 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பு செல்வதாக கூறி குருணாகலுக்கு செல்லும் இந்த மாணவர்கள், ஜோடி ஜோடியாக இணைந்து மோசமான முறையில் நடந்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த மோசமான நடவடிக்கைகயை தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

கடும் எச்சரிக்கையினை அடுத்து அவர்கள் பெற்றோர்களிடம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மாணவ, மாணவிகளின் செயற்பாடு குறித்து அறிந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சி நிலையை அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.