Trending News...

17 வயது சிறுவன் பரிதாபகரமான நிலையில் சடலமாக மீட்பு.

பொகவந்தலாவ, லொய்னோன் தோட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து 17 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமான நிலையில் நேற்று (30) மாலை 5.30 மணி அளவில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றில் இருந்து தோட்டத்திற்கு புல் வகைகளை வெட்டுவதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆற்றுப் பகுதிக்கு சென்ற சிறுவனை நீண்ட நேரமாக காணவில்லை என பொது மக்களும் உறவினர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், நீண்ட லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஆற்றில் சடலமாக கிடந்ததை இனங்கண்ட பொதுமக்கள் உடனடியாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த பொகவந்தலாவ பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சடலமாக மீட்கபட்ட இளைஞர் 17 வயதுடைய ராத கிருஷ்சாந்தன் எனவும் அடையாளம் காணபட்டுள்ளதாகவும் குறித்த சிறுவனின் தாய் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் தனது தந்தையின் பாராமரிப்பில் இந்த சிறுவன் வளர்ந்து வந்ததாகவும் பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு இது கொலையா அல்லது தவறி விழுந்ததில் குறித்த சிறுவன் உயிர் இழந்தாரா என்ற நிலையில் விசாரனைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக இன்று (31) நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.