17 வயது மாணவன் வீட்டுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை

கொஸ்லந்த , மெதகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவரொருவர் நேற்றிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் அவரது வீட்டுக்கு முன்னால் அமைந்துள்ள மா மரத்தில் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மாணவர் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருத்த நிலையில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் , தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
close