உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

19 பேரை சரமாரியாக சுட்டு கொன்ற 18 வயது மாணவன் பரபரப்பு!

ரஷ்யாவில் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்துவது வழக்கம். ஆம், வழக்கம் என்று சொல்லும் அளவிற்கு அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆனால் ரஷ்யாவில் மாணவர்கள் தாக்குதலுக்கு பதிலாக தீவிரவாதிகள் தாக்குதல்தான் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில் முதல்முறையாக தற்போது ரஷ்யாவில் மாணவர் ஒருவர் கல்லூரிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள்.

விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் என்ற 18 வயது மாணவர்தான் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார். ரஷ்யாவின் கிரிமையாவின் கெர்ச் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மொத்தம் 19 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

துப்பாக்கி சூடு நடத்திய விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவிற்கு இதுதான் தனக்கு கனவு என்று கூறப்பட்டுள்ளது. 1999ல் அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளிக்கூடத்தில் எரிக் ஹாரிஸ் என்ற மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதேபோல் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு அதேபோல் உடை அணிந்து துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

இதுதான் கனவு என்று கூறினாலும், இவரது மனநிலை நன்றாகவே இருந்துள்ளது. ரஷ்யாவில் மனநிலை சோதனை செய்த பின்தான் துப்பாக்கி வழங்குவார்கள். இவர் அந்த சோதனை எல்லாம் முடித்துவிட்டுதான் துப்பாக்கி வாங்கி உள்ளார்.

அதேபோல் கடைசியாக 19 பேரையும் சுட்டுவிட்டு அவர்களை கல்லூரி நூலகத்தில் தூக்கி கொண்டு சென்றுள்ளார். கடைசியில் அதே இடத்தில் வைத்து தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவின் தோழிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.