உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து : 21 பேர் பரிதாப சாவு

காஷ்மீரில் மினிபஸ் ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் பனிலால் பகுதியிலிருந்து ரம்பனுக்கு நேற்று காலை பயணிகளுடன் மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கேலா மோர்க் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மினிபஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பஸ்சில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று காலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.