உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

திடீரென காணாமல் போன 300 ஆண்டு கால பழமையான பாலம்

வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர்.

புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பாலம்தான் மேய்ச்சல் நிலத்துடன் மேட்டு பகுதிகளை இணைத்தது என டெமிரோரென் செய்தி முகமை தெரிவிக்கிறது.

பலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்த பாலத்தை கடந்தவாரம் கூட பார்த்ததாக மக்கள் கூறியதாக ஊடக செய்திகள் விவரிக்கின்றன. இது பாலம் குறித்த சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்கிறது.

பழங்கால பொக்கிஷமான இந்த பாலம் மாயமானதை சாதரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை என துருக்கி அரசு கூறி உள்ளது. இந்த பாலம் தொடர்பான விரிவான விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளதாக டெய்லி சபா செய்தித்தாள் தெரிவிக்கின்றது.

ஊடகங்களில் செய்தி வரும் வரை பாலக் கொள்ளையர்கள் குறித்து நாங்கள் கேள்விபட்டதில்லை எனறு ஊர் பெரியவர் டோகன், விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பாலம் இடிந்து விழுந்து இருக்கிறது. பாலத்தின் கற்கள் காணமால் போய் உள்ளது என்பதுதான் பெரும்பாலான கிராம மக்களின் கருத்தாக உள்ளது.

கருங்கடல் பகுதியில் உள்ள பள்ளதாக்குகளில் திடீர் வெள்ளம் அவ்வப்போது ஏற்படும். கடந்த வாரங்களில் லேசான மழை பெய்து இருந்தாலும், இந்த பாலத்தின் கற்களை அடித்து செல்ல இதுவே போதுமானதாக இருந்திருக்கிறது.

அதாவது இந்த பாலத்தின் கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

மேய்ச்சல் பகுதியான இந்த இடத்தில் இதுபோல பழமையான நிறைய கற்பாலங்கள் உள்ளன.