உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆசைக்கு இணங்காததால் 34 மாணவிகளை சரமாரியாக அடித்த கும்பல்

பீகாரில் உள்ள அரசு பள்ளியின் 34 மாணவிகளிடம் உள்ளூர் கும்பல் ஒன்று தவறாக நடக்க முயறுள்ளது. அதற்கு மாணவிகள் மறுக்கவே, அவர்களை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ளது சவ்பால் மாவட்டம், திரிவேணிகஞ் கிராமம். இங்குள்ள கஸ்தூரிபாய் உறைவிட அரசு பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள பெண்கள் விடுதியில் 34 மாணவிகள் தங்கியுள்ளனர். மாணவிகளின் விடுதியில் கதவை உடைத்து சில உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

விடுதியில் 12 முதல் 16 வயதான மாணவிகள் இருந்துள்ளனர். ஆசைக்கு இணங்காததால் சரமாரியாக மாணவிகளை அடித்துள்ளனர். இதில் சில மாணவிகள் பாதுகாப்புக்காக, அந்த இளைஞர்களை எதிர்த்து அடித்துள்ளனர்.