உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மசாஜ் சென்டரில் விபச்சாரம் தொழில் நடத்தி, பிட்டு படம் எடுத்த 3 பேர் கைது!!

மதுரையில் உள்ள திடீர் நகர், மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி, பாலியல் தொழில் நடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை திடீர் நகரில் உள்ள ரூபி என்ற தனியார் விடுதியில், மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அந்த மசாஜ் சென்டரில், 20 முதல் 25 வயது கொண்ட இளைஞர்கள் அதிகளவில் வந்ததால், பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொண்ட காவல்துறையின அங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததை கண்டுப்பிடித்தனர். மேலும், மசாஜ் சென்டரில் வேலை தருவதாக கூறி, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பெண்களை அழைத்து வந்து, அவர்களை வற்புறுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ராஜ்குமாரையும் அவருடன் இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மசாஜ் சென்டரில் பாலியல் படங்களை எடுக்க அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.