உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய 3 பேர் ரெயில் மோதி பலி

டெல்லி நங்லாய் ரயில் நிலையம் அருகே 3 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டிருந்தனர். போதை தலைக்கு ஏற அவர்கள் ரயில் தண்டவாளத்தில் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், சுமார் 7.30 மணி அளவில் அந்த வழியாக பிகானெர்-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.

போதையில் இருந்த இளைஞர்கள் ரயில் வருவதை தெரியாமல் நடனமாடிக்கொண்டிருந்தனர். கடைசி நேரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர்கள் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார்,  அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இறந்தவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தெரியவில்லை.