உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நெல்லியடியில் 42 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்

யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள வீதியால் சென்று நடந்து சென்றுகொண்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவருடைய சங்கிலியே இவ்வாறு அபரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தமையால் அடையாளம் காணப்படவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.