Trending News...

பாலியல் புகார்: 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது கூகுள்.

நியூயார்க், அக்.28 கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் பதவியில் இருந்த 13 பேர் உள்பட 48 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்று கூகுள் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தை உருவாக்கிய ஆன்டி ரூபினுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு 90 மில்லியன் அமெரிக்க டாலர் களை கூகுள் நிறுவனம் அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளி யானது.

இந்நிலையில், அதற்கு பதிலளித்து சுந்தர் பிச்சையும், கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் எலீன் நாட்டனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள் ளதாவது:

நியூயார்க் டைம்ஸ் நாளி தழில் வெளியான செய்தியைப் படித்து வேதனை அடைந் தோம். எங்கள் நிறுவன ஊழி யர்களிடம் இருந்து பாலியல் புகார்கள் வந்தால் மிக கவனமாக அவற்றை ஆய்வு செய்கிறோம். அந்தப் புகார் உண்மை என்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கி றோம். இதுவரை, அதாவது கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து பாலியல் புகார் குற்றச்சாட்டுக்கு ஆளான 48 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியைவிட்டு நீக்கிய போது அவர்களுக்கு எந்த வொரு ரொக்கமும் அளிக்கப் படவில்லை.

இவர்களில் 13 பேர் உயர திகாரிகள் பதவியில் இருந்த வர்கள். பாலியல் புகாரை அளிப்பவர்களுக்கு நாங்கள் மரியாதையையும், ஆதரவை யும் அளிக்கிறோம். கூகுள் நிறுவனம் பணிபுரிவதற்கு சிறந்த நிறுவனம் என்பதுடன் பாதுகாப்பானதுமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.