விமான படையின் டிபெண்டர் தடம்புரண்டது!! ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்!! மேலும் பல வாகனங்கள் சேதம்

கட்டுநாயக்கவில் விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் வகை ஜீப் வண்டி விபத்துக்குள்ளாதால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் அனுராதபுரம் நோக்கி பயணித்த விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் வகை ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல வாகனங்கள் சேதம் அடைதுள்ளன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 18ஆம் மைல் கல் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிபெண்டர் வாகனத்தை ஓட்டிய விமானப்படை தளபதி எஸ்.எல்.பீ.நுவர பிரதிப் ரணசிங்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் அனுராதபுரம், தலாவ, குபுக்கஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

மற்றுமொறு சிப்பாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஜீப் வண்டி, அந்த வீதியில் பயணித்த பல வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

close