உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

50 ஆயிரமாக மாறிய 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள்

இலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது. இந்த 50,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் குருணாகல் பிரதேசத்தில் பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். 

ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய நாணயத்தாள் 5000 ரூபாயாகும். 5000 ரூபாய் நாணயத்தாள் போன்ற தோற்றத்தில் 50,000 ரூபாயாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது.
“சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது, விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை, எனவே மேலதிக தகவல்களை வழங்க முடியாது” என்று பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவிலவைத் கூறினார்.


இந்த 50,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் குருணாகல் பிரதேசத்தில் பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரதேசத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரபல பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரும் இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் தற்போது அதிக மதிப்புடையதாக 5,000 ரூபாய் நாணயத்தாள் புழக்கத்தில் உள்ளது. இருந்தாலும், 5,000 ரூபாய் நாணயத்தாள் போன்று 50, 000 ரூபாய் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.