உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ் மாவட்டத்தில் 55 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 04 மாதங்களாக சுன்னாகம் , மாணிப்பாய் மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 42 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பினனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , 13 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இவர்கள் ஆவா , தனுரொக் மற்றும் அஜித் குழுக்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் அதிகாரியொருவர் எமக்கு குறிப்பிட்டிருந்தார்.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.