உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் 5 பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம்.

பொகவந்தலாவ மோரா தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 05பெண் தொழிலாளர்கள் மின்னல் தாக்கியதில் காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக  வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்று 24.10.2018.புதன்கிழமை பிற்பகல் 01.30மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது

பொகவந்தலாவ பகுதியில் பெய்த கடும் மழையின காரணமாக 09ம் இலக்க தேயிலை மழையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை,  மீன்கம்பம் ஒன்றின் மீது மின்னல் விழுந்து தொழிலாளர்களை தாக்கி உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.