உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய வான்!! 7 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் வேன் ஒன்று நேற்று நள்ளிரவு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்கானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேன் கொழும்பிலிருந்து கல்முனைக்கு பயணித்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாற்று பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் வேககட்டுப்பாட்டடை மீறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது .

இதில் பிரயாணித்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்யைளிக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.