உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆறு வயது சிறுமியை சீரழித்த 7 வயது சிறுவர்கள் இருவர்: வெளியான பகீர் காரணம்

அவுஸ்திரேலியாவில் மொபைலில் ஆபாச காட்சிகளை தொடர்ந்து பார்வையிட்டுவரும் இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் தொடர்புடைய சிறார்கள் இருவரும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் சைபர்-பாதுகாப்பு நிபுணரான Susan McLean இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு மத்தியில் அரங்கேரிய இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் ஏன் பொலிசாரிடம் அப்போதே புகார் அளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை அந்த பாடசாலை மூடி மறைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அந்த பாடசாலையில் இருந்து விலகிக்கொண்டாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரும் தொடர்ந்து பாடசாலைக்கு சென்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி சம்பவம் தொடர்பான சிறார்கள் இருவரும் தங்கள் மொபைல் போன்களில் ஆபாசப்படங்களை சேமித்து வைத்திருந்ததும் பாடசாலை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.