உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பாலத்துடன் மோதிய தனியார் பேருந்து!! 8 பேர் வைத்தியசாலையில்!!

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் சென்ற மூன்று பஸ்களில் ஒரு பஸ்வேகக் கட்டுப்பாட்டை இழந்து செட்டிகுளம், பெரியகட்டு 40 ஆவது மைல் கல் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் குறித்த பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.