Trending News...

87 முறை கத்தியால் குத்தி தோழியையே கொலை செய்த பெண்!

பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான Lisa Savage கடந்த ஏப்ரல் 15ம் திகதி தன்னுடைய 20 வருட தோழி Sarah Hayton உடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சேவிஸ்டோ ரயில் நிலையத்தை நெருங்கும்போது, தன்னுடைய பையில் மறைத்து வைத்திருந்த Lisa கத்தியை கொண்டு தன்னுடைய தோழி Sarah-வை தொடர்ந்து 4 நிமிடங்கள் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

எதிர்பாராத இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த Sarah அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்தார்.

உடனே அவர் இறந்துவிட்டார் என நினைத்த Lisa, நல்லபடியாக உறங்கு என கூறிவிட்டு கதவை திறந்து வெளியில் சென்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் தங்களை காத்துக்கொள்வதற்காக ரயிலில் ஓரத்தில் பதுங்கி கொண்டனர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவியின் மூலம் சம்பவத்தை பார்த்த அதிகாரி உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் வைத்து குற்றவாளி Lisa-வை கைது செய்தனர்.

இந்த பலத்த காயமடைந்த Sarah-விற்கு 67 மேலோட்டமான தையல் மற்றும் 20 ஆழமான தையல் போடப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து Sarah கூறுகையில்,

Lisa அவருடைய அம்மாவை சந்திக்க என்னை அழைத்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அதனால் தான் ஆத்திரமடைந்து என்னை கத்தியால் குத்தினார் என்று கூறியுள்ளார்.

முன்னதாக Lisa தன்னுடைய காதலனை கொலை செய்த வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது