குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்துபுரம் கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கனகாம்பிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 5 பிள்ளைகளின் தந்தையான இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.