உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.

வெல்லவாய பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று காலை திடீரென தீப் பற்றி எரிந்ததில் குறித்த முச்சக்கரவண்டி முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு அதிலிருந்து வௌியேறி சில நிமிடங்களில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினை அணைப்பதற்காக அங்கிருந்தவர்கள் முயற்சித்துள்ள போதும் அது பயனளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்