உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கோர விபத்தில் சிக்கிய ஆட்டோ!! தாய், மகன் சம்பவ இடத்திலேயே பலி- படங்கள்

ஹஜ்மா-மித்தெனிய சாலையில் உள்ள குடகோடா பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஆளடியான் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாய் மற்றும் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சூயியபுகுன கிராமத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட ஆட்டோவானது எதிரே வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதாகவும், இதனால் உள்ளிருந்த பெண் கீழே விழ டிப்பர் சில்லு அவர் மேல் ஏறி இறங்கியதாகவும் எதிரே வந்த வாகன சாரதியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பலியானவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

சம்பவம் தொடர்பாக டிப்பர் சாரதியை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.