உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ரயிலுடன் கார் மோதி கோர விபத்து

புகையிரதம் ஒன்று வருவதை அருகில் உள்ளவர்கள் தெரிவித்த போதிலும் அதனை கருத்திற்கொள்ளாது புகையிரத கடவையின் ஊடாக பயணித்த கார் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தினால் காரின் சாரதி பலத்த காயங்களுக்குட்பட்டு  பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

காலி வெக்குனுகொட பகுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

அளுத்கமவில் இருந்து காலி நோக்கி வருகை தந்த புகையிரதத்திலேயே இந்த மோட்டார் கார் மோதியது.

புகையிரதம் வருவதை அவதானித்த சாரதியின் மனைவி உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளார்.

கணவருக்கும் காரில் இருந்து இறங்குமாறு அவர் கூக்குரலிட்ட போதிலும் அச்சந்தர்ப்பத்தில் காரை திருப்புவதற்கு முடியாமல் போய்விட்டது.

இதனை தொடர்ந்து புகையிரதத்துடன் மோதிய கார் சுமார் 100 மீட்டர் அளவில் இழுத்துச்செல்லப்பட்டது.