Trending News...

திடீரென்று இலங்கையில் தரை இறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்

உலகில் இரண்டாவது மிக பெரிய பொருட்கள் விநியோக விமானமான அன்டனோவ்-124 (an-124) விமானம் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் இன்று அதிகாலை மிண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

19 பேருடன் சவூதி அரேபியாவின் PRINCE SULTAN விமான நிலையத்திலிருந்து, இந்தோனேசியா வரை பயணித்த குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், அலுவலகர்களின் ஓய்வுக்காகவும் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த விமானம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தோனேசியா நோக்கி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

உலகின் பெரிய விமானங்கள் இலங்கை போன்ற நாடுகளில் தரையிறங்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கு ஏற்ப வசதிகள் மற்றும் அவசர நிலைமைகளின்பொது தரையிறங்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றனவா என்பதை இதுபோன்ற சந்தர்ப்பங்களே காட்டுகின்றன.

இதனால் ஏனைய விமானங்களும் தரையிறங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஒரு வெளிநாட்டு விமானம் திடீரென தரையிறங்கும்போது அதனால் விமானத்துறைக்கு ஏற்படும் வருவாய் அளப்பரியதாகும்.