உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக் காதலால் விபரீதம்; வாலிபருடன் தங்கிய பெண் டாக்டர் தற்கொலை முயற்சி

சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் காலை 22 வயதுள்ள இளம்பெண் ஒருவரை வாலிபர் அழைத்து வந்தார். அந்த பெண் விஷம் குடித்து விட்டதாக சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் மாயமானார். இதனால் அந்த இளம்பெண் திகைத்தார்.   ‘ஓட்டலில் என்னுடன் 15 நாட்கள் உல்லாசம் அனுபவித்து விட்டு, அந்த வாலிபர் தப்பி விட்டார். அவர் மீது போலீசில் புகார் செய்யப் போகிறேன்’ என்று கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்து அப்பெண் வெளியேறினார். ஆனால், நேற்று அந்த பெண் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி பள்ளப்பட்டி ேபாலீசாருக்கு தகவல் தெரிந்ததும், மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அந்த வாலிபர் தனது நெருங்கிய நண்பர் என்றும் போலீசில் கூறினார்.

 அப்பெண் டெல்லியை சேர்ந்தவர் என தெரிய வந்ததால், போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. இளம்பெண்ணின் பெற்றோர் இருவரும் டெல்லியில் பிரபல டாக்டர்கள். மகளையும் டாக்டராக்கும் ஆசையில், சீனாவுக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அங்கு படிப்பை முடித்த அவர், தர்மபுரியில் பயிற்சி பெற்று வந்தார். இதற்காக சேலத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
அப்போது, சேலத்தை சேர்ந்த 22 வயது வாலிபருடன், பேஸ்புக் மூலம் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த வாலிபர் டிப்ளமோ படித்துள்ளார்.

இருவரும் சேலத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்தனர். ஒருநாள் வாடகை 10 ஆயிரம். மூன்று நாட்கள் வாடகை 30 ஆயிரத்தை தாண்டியது. இருவரும் பைக்கில் பல இடங்களுக்கு சென்றதில் கையில் இருந்த பணம் தீர்ந்து, பைக்கை அடகு வைத்து செலவு செய்தனர். பின்னர், ஓட்டலுக்கு பணம் கட்ட முடியாமல் அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டனர். ஆனால், ஓட்டல் ஊழியர்கள் அவர்களை  கண்காணித்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்கவே, அப்பெண் டாக்டர் தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால்  முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் காதலனுடன் தகராறில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த வாலிபர், அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்துள்ளார். இதனால், வாலிபர் மீது போலீசில் புகார் கொடுக்க மறுத்து, அவரை தனது நண்பர் என கூறி வருகிறார். இந்த விவகாரம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள், சேலம் புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.